டாஸ்மாக் கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளுக்கு 7 விடுப்பு அளிக்க மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், "பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மூட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் 11-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஆந்திர மாநிலத்தையொட்டிய தமிழக எல்லையில் 5 கிலோ மீட்டருக்குள் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6 மணிவரையில் மூடி வைக்க வேண்டும்.

அதேபோன்று தமிழ்நாட்டில் வருகிற 18-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 18-ந் தேதி இரவு 12 மணிவரையிலும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றைய தினத்திலும் சில்லரை விற்பனை மதுபான கடைகள் மற்றும் மதுக்கூட்டங்களை மூடி வைக்க வேண்டும். ஆக மொத்தம் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac may close for 7 days in vellore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->