மீண்டும் மது விற்பனைக்கு தடை!! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் மதுவிற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு 01.05.2019 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள, 2003 விதி 12 துணை விதி(2)-இன்படி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2 முதல் எப்.எல்.11 முடிய (எப்.எல்.6 தவிர) உள்ள உரிமத்தலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

Image result for தூத்துக்குடி கலெக்டர் seithipunal

மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால்

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி" என அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac may ban in thuthukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->