தமிழகத்தில் எது நடக்க கூடாதோ.! அதுவும் நடந்தேறிவிட்டது.!! இனி தமிழகத்தை யாரும் காப்பற்ற முடியாது.!! எல்லாம் நம் கையை மீறி போனது.!!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுக்கடையை மூட கோரி பள்ளி மாணவர்கள் முதல் பல்லு போன ஆயா வரை போராடி வருகின்றனர்.

இந்த மதுக்கடைக்கு எதிராக பாமகவின் அன்புமணி சட்ட ரீதியாக போராடி மூடினாலும், அதை மீண்டும் சட்டத்தின் வழி கொண்டு தமிழக அரசு திறந்துவிடுகிறது.

தமிழகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு இந்த மதுக்கடைகள் தான் முக்கிய காரணமாக உள்ளது என அணைத்து தரப்பினரும் குற்றம்சாற்றிவருகின்றனர். பள்ளி மாணவர்கள் முதல் தற்போது இந்த மதுக்கடைகளினால், மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அரசு மதுக்கடையில் குடித்துவிட்டு அனாதைகளை போல் சில குடிமகன்கள் தெருக்கள் மற்றும் சாலைகளில் மயங்கி கிடக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. நாமும் அவர்களை கடந்து செல்வது வழக்கமானதாக மாறிவிட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரதான சாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மதுகுடித்துவிட்டு, மயக்க நிலையில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து. தலையில் அடித்துக்கொண்டு சென்றனர்.

இதனை பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவர் அந்த அம்மா மீது வாகனம் ஏதும் ஏறிவிடக்கூடாது என அருகில் இருந்த டிவைடரை தள்ளி கொண்டு அந்த அம்மா அருகே வைத்தார். இதனால் அந்த பெண் உயிர் தப்பினார். சிறிது நேரம் போதை தெளிந்த அந்த பெண் வேகமாக நடையை கட்டினார்.

தமிழகத்தில் இன்னும் என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ.. யாரை குற்றம் சொல்லுவது என்று தெரியவில்லை. தமிழக அரசை கேட்டாள், மக்கள் குடிப்பதினால் தான் நாங்கள் விற்கிறோம் என்கிறது. குடிமகன்களை கேட்டாள் ''அவர்கள் விற்பதால் தான் நாங்கள் குடிக்கிறோம்'' என்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC ISSUE LADY DRINK IN LIQUEUR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->