போதை ஏற்ற 30 கிலோ மீட்டர்.. சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாகும் அபாயம் - கொந்தளிப்பில் குடிமகன்கள் வெளியிட்ட அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கடம்பூர் மலைப்பகுதியில் பொதுமக்கள்எதிர்ப்பால் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க அரசியல் கட்சியினர் முயன்றுவருவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை அப்பகுதி மக்களின் தொடர்போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்டது.

ஆனால், இந்த கடையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்தனர். இதன்படி கடம்பூர் அருகே உள்ள ஜீவா நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மலைவாழ் இளைஞர் மற்றும் மாதர் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புதிய இடத்தில் மதுக்கடை திறக்கும் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மூடப்பட்ட மதுக்கடையை திறப்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, மது அருந்துவதற்காக கடம்பூர் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு வரை வரவேண்டியுள்ளது என காரணம்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் உறுதுணையாக இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன்காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இது தொடர்பாகமாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac again reopen erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->