பலத்தை கட்டி முடிக்க மக்களை நரபலி கொடுக்க முயற்சியா..? கருப்பு மை பூசப்பட்ட வாகனங்கள்: கோவையில் தொற்றிக்கொண்ட பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


கோவை மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தார் ட்ரம் வெடித்துச் சிதறியதில்  பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த கார்கள் மீது தார் பரவி அவை நாசமாகியுள்ளது.

கோவை மக்களால் அபாயகரமானது என்று வர்ணிக்கப்படும் நூறு அடி சாலை மேம்பால கட்டுமானப்பணி  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.

அங்கே இருக்கும் வணிக வளாகங்கள் பதிக்காத படி நடந்து கொண்டு, கமிசனுக்காக பாலத்தின் டிசைனையே மாற்றி அமைத்து கட்டி வருகிறது ஆளும் கட்சி.

அதன் செங்குத்தான உயரம், வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கதறி வருகின்றனர் பொதுமக்கள்.

தற்போது பாலத்தின் மீது தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இன்று மதியம் பயங்கர சத்தத்துடன் தார் டின் வெடிக்க, ட்ரம்மிலிருந்து பீறிட்ட தார் பாலத்துக்குக் கீழே வழிந்திருக்கிறது.

அப்போது, கீழே சென்றுகொண்டிருந்த வாகனங்கள்மீது தார் ஊற்றியது. இதில், விலை உயர்ந்த எட்டு கார்கள் நாசமடைந்தன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tar-spill-spoiled-cars-in-coimbatore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->