என்ன கொடுமை சார் இது.! வீட்டு வாசலில் கூடவா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .?! தஞ்சாவூர்ல நடந்த கொடுமையை பாருங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், பொது இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது வீட்டிற்கே சென்று அங்குள்ள பெண்களைத் தாக்கி நகைகளை, பறித்து வரும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவம், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆமாம், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே ராஜாளிவிடுதி கிராமம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் இவரது மனைவி அஞ்சேஸ்வரி. இவர் திருவோணத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை அஞ்சேஸ்வரி தனது வீட்டு வாசலை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள்  
அஞ்சேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் சங்கிலியைப் பறித்தனர்.

அப்போது, அஞ்சேஸ்வரி சாதுர்யமாக கொள்ளையர்களைத் தடுக்க முயற்சி செய்து, தனது சங்கிலியை பிடித்துக்கொண்டு போராடினார். அனால் கொள்ளையர்கள் விடவில்லை, மேலும் அஞ்சேஸ்வரியை சரமாரியாக அடித்து கீழே தள்ளி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்து விட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அஞ்சேஸ்வரி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத் தொடர்ந்து, அஞ்சேஸ்வரி கணவர் காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில், திருவோணம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து  நகையை பறித்து சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tanjore women chain robbery from her house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->