தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை என்ற கள ஆய்வு அறிக்கை நூல் தற்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம்மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனைகளை மேம்போக்காகவும், அறிதலோ புரிதலோ இன்றி அரைகுறையாக எடுத்துரைக்கும் திராவிடக் கட்சிகளின் கலாச்சாரத்தில், முற்றிலும் மாறுபட்ட ஒரு பெரு முயற்சி இந்த நூல்.

முன்னர் வெளியிடப்பட்ட “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே, வெளி மாநிலத்தவருக்கு அல்ல” என்பதன் தொடர்ச்சியாகவே மேற்குறிப்பிட்ட நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

வெளி மாநிலத்தவர் சிக்கல் குறித்து 1991-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பேசிவரும், போராட்டங்கள் நடத்திவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமது ஆய்வுகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அதிகமிருக்கும் மாவட்டங்களில் மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது என்பதை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது என்றும் அங்கே வெளி மாநிலத்தவர் அதிகளவில் குடியேறியுள்ளனர் என்றும் இந்நூல் நிறுவுகிறது.

பல்வேறு மாநிலங்களில் வேலை வாய்ப்புக்களில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுப்பதைச் சுட்டிக்காட்டி, வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கவும், நிரந்தரக் குடிமக்களாகத் தங்கவும் தடை இருப்பதை எடுத்துச் சொல்லி, அருகமை கேரளாவில்கூட மலையாள மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைகளும், பிற சலுகைகளும் தருவோம் என்று காங்கிரசு அரசு 2013 ஆகஸ்டு 25 அன்று ஆணை பிறப்பித்ததைக் கோடிட்டுக்காட்டி, தமிழர் நிலங்களில் நடக்கும் அவலங்களை அட்டவணைப்படுத்துகிறது இந்தக் குறிப்பேடு.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மோசடிகள், முறைகேடுகள் மூலம் வெளி மாநிலத்தவர் திட்டமிட்டு புகுத்தப்படுகின்றனர். தமிழக அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவருக்கு இடமளிக்க 2016 செப்டம்பர் 1 அன்று புதிய சட்டம் ஒன்றை இயற்றியது தமிழ்நாடு அரசு.

வெளி மாநிலத்தவர் மட்டுமல்ல, வெளி நாட்டினர்கூட வேலைக்கு வரலாமாம். அவர்கள் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லையாம்.

இந்த கேடுகெட்ட நிலையைச் சீரமைக்க, “தமிழர் வேலை உறுதிச் சட்ட வரைவு” ஒன்றையும் இந்நூல் முன்மொழிகிறது.

தமிழர்களும், தமிழகமும் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகள் குறித்தெல்லாம் இம்மாதிரியான “கள ஆய்வு அறிக்கை” வெளியிடப்பட வேண்டும்.

அவற்றை நம் வீடுகளில், தெருக்களில், வேலையிடங்களில் எல்லாம் விவாதிக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் பாணியில் வெற்று முழக்கங்கள் எழுப்பாமல், தெருக்கூத்தாடிகளின் பின்னால் சென்று வாய்க்குவந்தபடி பிதற்றாமல், அறிவார்ந்த தமிழர்களாய் தெளிவான வழிகள் அமைப்போம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu without tamil peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->