இசுலாமியர்களின் திருவிழாவில், மேளம் இசைத்தபடி ஊர்வலமாக சென்ற அமைச்சர் ஜெயக்குமார்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற இசுலாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். ராயபுரத்தில் உள்ள ஹஸ்ரத் ஷெய்கு சுல்தான் அப்துல் காதிர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்காவில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு விழா தொடங்கியது.

இதையடுத்து, நேற்று நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ஊர்வலத்தில் மேளம் இசைத்தபடி சென்றார். இதனால் ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் உற்சாகம் அடைந்தார்கள்.  சந்தனக்கூடு ஊர்வலம் முடிந்த பின்னர் பாத்திஹா ஓதப்பட்டு தர்காவில் சந்தனம் பூசப்பட்டது. 

இந்நிலையில், இன்று உரூஸ் விழாவும், பிப்ரவரி 3ம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Minister Jayakumar Celebrate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->