உலக பணக்காரர் பில்கேட்ஸிடம் உதவி கேட்ட தமிழக அமைச்சர்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், காளப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஓவியங்களை   பார்வையிட்டனர்.  

Image result for senkottayan

விழாவை சிறப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''8ம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தில் பாலியல் வன்முறையை தடுக்கும் வழிமுறைகளில்  பெண்களின் உடை குறித்து இருக்கும் கருத்துகள் வரும் காலங்களில் மாற்றப்படும், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத  தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு  எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், ஆசிரியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்களை  பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே  2015லிருந்து மேல்நிலைப் பள்ளிகள் மூடுவது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாகவும், பள்ளிகளை மூடுவதும், திறப்பதும் அரசால்தான் முடியுமே தவிர மற்றவர்களால் அல்ல என்றும் உறுதியளித்தார்.

Image result for Tamilnadu minister asked for help from world rich billionaire Bill Gates

மேலும் அமெரிக்காவில் உள்ள உலக பணக்காரர் பில்கேட்ஸின் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu minister asked for help from world rich billionaire Bill Gates


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->