தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்ததால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம்,அம்மாவட்டத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்ததால் அந்த பகுதி மக்கள் பெரும் பரபரப்பில் உள்ளார்.

Image result for tamilnadu housing board

தமிழ்நாட்டில் வீட்டுமனைகள் மற்றும் வீடுகளை கட்டி விற்பனை செய்யும் பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் செய்கிறது.இந்நிலையில் கடந்த 1994 ம் ஆண்டு சாந்தா என்பவரிடம் 75.5 சென்ட் நிலத்தை எடுத்துக்கொண்டு சதுர அடி ஒன்றுக்கு 8 ரூபாய் 80 பைசா என கணக்கிட்டு இழப்பீடுதொகையை கொடுத்தது.
இந்நிலையில் 2007 இல் சாந்தா தனக்கு கொடுக்கப்பட்ட தொகை சந்தை மதிப்பை விட மிக குறைவு என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

விழுப்புரம்

அதன் தீர்ப்பு கடந்த 2013 இல் வழங்கப்பட்டது.அதில் சந்தாவுக்கு சதுர அடிக்கு 20 ரூபாய் 80 காசுகள் என கணக்கிட்டு கொடுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.இதனை கண்டுகொள்ளாத வீட்டுவசதி வாரியம் காலம் தாழ்த்தி வந்தது.இந்நினையில் சாந்தா மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர்,தற்பொழுது அதன் தீர்ப்பில் ஏற்கனவே கூறப்பட்ட தொகையை வட்டியுடன் 30 லாசத்தை கடந்த பிப்ரவரி 20 க்குள்  வழங்க ஆணையிட்டது.தவறும்பச்சத்தில் அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரித்திருந்தது. இதை எதையும் கண்டுகொள்ளாமல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் இருந்து வந்தது.இந்நிலையில் நீதிமன்றம்  வீட்டுவசதி வாரிய  அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.அதன்படி அலுவலகத்தில் உள்ள மேசை,நாற்காலி,கணினி உட்பட அனைத்தையும் நீதிமன்றம் ஜப்தி செய்தது.அரசு அலுவலகம் ஒன்றே ஜப்தி செய்யப்பட்டுள்ளதால் அபபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu housing board office Confiscation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->