தமிழக குழந்தைகளுக்கு பரவும் HIV பற்றிய அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், சென்றாண்டில் மட்டும் 236 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று கிருமி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Image result for HIV

கடந்த 2015ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 311 குழந்தைகள் ஹெச்.ஐ.வி நோய் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோய்யால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் பெரும்பாலான குழந்தைகள் அதாவது சுமார் 289 குழ்நதைகள் அவர்களது தாய் மூலம் ஹெச்.ஐ.வியால் பரவியது தெரியவந்தது.

Image result for HIV

ஆனால் மீதமுள்ள அந்த 22 குழந்தைகள் நோய் பாதிக்கப்பிற்கு உள்ளான காரணங்கள் பற்றி சரியாக தெரியவரவில்லை. இப்பொது இரண்டு வருடத்திற்கு பிறகு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாடு அமைப்பிற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா RTI மூலம் சில தகவல்களை வேண்டி விண்ணபித்திருந்தது.

Image result for HIV

அதில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களில், 2017ம் வருடத்தில் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, இருப்பினும் சுமார்  32 குழந்தைகளுக்கு HIV \ AIDS பரவியதற்கு காரணங்கள் கண்டறிய முடியவில்லை. மேலும் இது இதற்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 32 குழந்தைகளுக்கு காரணம் தெரியாமல் HIV பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu childs affect on HIV


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->