ஸ்டாலின் என்ன செய்கிறோம் என தெரியாமல் பிதற்றுகிறார்!! தமிழிசை அதிரடி!!  - Seithipunal
Seithipunal


வருகிற 10ம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி கூட்டத்திற்கு வருகை தருகிறார். அந்தப் பொதுக் கூட்ட நிகழ்விற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் தமிழிசை அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தார்.

மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து வருகிற 10ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் மோடியை வரவேற்கும் விதமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மருத்துவர் தமிழிசை அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது," மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத்துடன் மூன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். பாஸ்போர்ட் இடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் மோடி ஆட்சி என்பது வளர்ச்சியை குறித்து செயல்படுகிறது என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். இதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வருகை தருகிறார்கள். இதனால் வாக்குச்சாவடி அளவில் பாரதிய ஜனதாவிற்கு ஒரு மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என நம்பிக்கை கொண்டிருக்கிறோம்' என  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

பின்னர்," திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. என்ன பேச வேண்டும் என்பது புரியாமலே பேசி வருகிறார். திமுக ஐந்து முறை ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், அப்போதெல்லாம் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், கூவத்தை சுத்தப்படுத்த என்று கூறிவிட்டு பிறகு அதை நிறைவேற்றுவது இல்லை.

ஆனால், தற்பொழுது ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பஞ்சாயத்து என்ற பெயரில் கிராமங்களில் நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

ஸ்டாலின், வைகோ மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு கேட்டு மக்களிடம் செல்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் இலங்கை சம்பவத்தை காரணம் காட்டி அவர்களை விரட்டி அடிப்பார்கள்.

ஜாக்டோ ஜியோ போராட்டம், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேறுபாடு உள்ளது. தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai says about stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->