எதுகை மோனையில் என்னை மிஞ்ச முடியுமா? கெத்து காட்டிய தமிழிசை!! ஸ்டாலினிற்கு விடுத்த சவால்!! - Seithipunal
Seithipunal


டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாலை அணிவித்து மரியாதை செய்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர் அம்பேத்காரின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக பண பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு புதிய செல்போன் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த செயலிக்கு "பீம் ஆப்" என பெயரிட்டார்.

நேற்றைய தினம் பேய்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தத்தெடுத்திருக்கும் கிராமமான வெங்கடேசபுரத்தில் அவர் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. 

நேற்றைய தினம் திமுக டுவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தினை வைத்திருக்கிறார்கள். தேர்தல் என்று வந்ததும் திமுகவின் கொள்கை எல்லாம் பறந்துவிட்டது. இதே செயலை வேறொரு தலைவர் செய்திருந்தால் தற்போது ஏகப்பட்ட கண்டன அறிக்கைகள் வந்திருக்கும். நாங்கள் அப்படியல்ல. நாங்கள் எல்லோருக்கும் மரியாதை செய்து கொண்டிருக்கிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின், நாகரிகம் இல்லாமல் பேசிவருகிறார். காவலாளியை, களவாணி என்பதும், விவசாயியை, விஷவாயு என்றும் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் எதுகை மோனையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஏளனமாக பேசி வருகிறார். வேண்டுமானால், என்னுடன் எதுகை மோனையில் போட்டியிட்டு பேச சொல்லுங்கள் அதற்க்கு அவர் தயாரா" ? என பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai says about dmk in thuthukudi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->