தமிழ் புத்தாண்டு அன்று கொண்டாடப்படும் முக்கிய விழா அழிக்கப்பட்டு வருகிறது!! பாரம்பரியத்தை காப்போம்!! - Seithipunal
Seithipunal


உலகத்தில் வாழும் அணைத்து தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். புத்தாண்டுக்கு முந்தைய நாளில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழக மக்கள் ஈடுபட்டு வருவார்கள்.

புத்தாண்டு தினமான சித்திரை மாதத்தின் முதல் நாளில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் மாற்றும் பல தானியங்கள் நிறைந்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு தினத்தின் அதிகாலையில் வழிபடுவது வழக்கம். 

தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். கிராமங்களில் அணைத்து மக்களும் ஒன்று கூடி விவசாய நிலத்தில் வரிசையாக  ஏர்களை பூட்டி சாமிக்கு படைத்த பலதானியங்களை விவசாயநிலத்தில் விதைப்பார்கள். அதனையே "நல்லேர் பூட்டுதல்" என கூறுவார்கள் .

ஆனால் இன்றைய நவீன வாழ்கை முறையில் "நல்லேர் பூட்டுதல்" என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் போனது. தற்போது கலப்பை கட்டி ஏர் பூட்டி நிலத்தை உழுவதற்கு மாடுகள் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நவீனமாக வந்த டிராக்டர்கள் தான். மேலும் விவசாயம் அழிந்ததால் ஏர் உழுவும் காளைகளும் அழிந்துவிட்டன.

தமிழ் புத்தாண்டு அன்று  "நல்லேர் பூட்டுதல்" விழா நடத்துவதே, நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து தமிழர்கள் சிறப்பாய் வாழவேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுவதாகும். ஆனால் "நல்லேர் பூட்டுதல்" எனும் விழா அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடும் சூழ்நிலை வந்துவிட்டது. உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினமான இன்று நல்லேர் பூட்டும் திருவிழாவை செய்திபுனல் மூலமாக நினைவூட்டுகிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil new year festival


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->