மக்களவை எம்பிக்கள் தங்களது தொகுதி மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜ்பவனில் சன்சத் ரத்னா விருது வழங்கும் விழா நடை பெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு உள்ளார். 
  
முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு சன்சத் விருதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். இதில் பேசிய  புரோஹித், மக்களவை எம்பிக்கள் தங்களது தொகுதி மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.

கேரள எம்.பி. பிரேமசந்திரன்,ஹிமாச்சல் எம்.பி. அனுராக்சிங்தக்கூர் உட்பட 12பேருக்கு சன்சத்விருது வழங்கப்பட்டது.

பிரேம் பாய்ண்ட் பவுண்டேஷன் சார்பில் சிறந்த நாடாளுமன்றவாதிகள் 12பேருக்கு சன்சத்ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 

அப்போது பேசிய முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் ஆணைய விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தேர்தல் நடைமுறை சீர்திருத்தம் குறித்தும் இடம்பெற செய்ய வேண்டும் என பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Governor Talk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->