17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு எங்கு? எப்போது? - Seithipunal
Seithipunal


உலகத் தமிழ் இணைய மாநாடு அடுத்த மாதம் ஜூலை 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகிறது. இதுவரை 16 இணைய மாநாடு நடந்து முடிந்த நிலையில், இந்த வருடம் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த மாநாடு " அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்' என்ற தலைப்பில் நடைபெறும். இந்த மாநாடு, ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் 70க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
 
மக்கள் அரங்கில், பொருள்களின் இணையம், பைதான், ரோபோடிக் தொழில்நுட்பம், 3 டி பிரின்டிங் தொழில்நுட்பம், குறுஞ்செயலி உருவாக்கம், மொழியியல், மேகக் கணிமை தொழில்நுட்பம், வலைப்பதிவு உருவாக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. 

இந்த விழாவில்  பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் சிறப்புரையாற்றுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Inaiya Manadu covai Next Month


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->