அணைத்து தரப்பிலுமிருந்து நெருக்கடிவரும் நிலையில் எஸ்.வி.சேகர் எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal



பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதையடுத்து போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளார் என கூறப்படுகிறது. 

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பான ஆடியோ வெளியானவுடன், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்பொழுது பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் சர்ச்சைக்குரிய விசயமானது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் தளத்தில் பெண் நிருபர்கள் பற்றி அவதூறு கருத்தை வெளியிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பெண் நிருபர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 4 பிரிவில் வழக்கு பதிவு செய்ய ப்பட்டுள்ளது.  இதையடுத்து எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் எஸ்.வி.சேகர் இதனை கருத்தில்கொண்டு கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sv.sekar abscond for women reporter case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->