சென்னை மக்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த மழை!!
suddenly Chennai rain now
காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வெயில் 110 டிகிரி தாண்டி வெப்ப அலை வீசியது. அதனைத் தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை ஆற்காடு போன்ற பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வந்தது.
எப்போது சென்னையில் வெயில் குறையும் மழை பெய்யும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மழை தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்த நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
suddenly Chennai rain now