பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள்! சற்று நேரத்தில் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


துரிஞ்சாபுரம் ஒன்றியம் கார்கோணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டத்தில் கடைசிநாள் வரை  பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் கலந்துகொண்டார். இதனால் அவரை பள்ளிக்கல்வித்துறை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் வெளியே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது நீண்ட நேரமாக நின்றதால் மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மனைவியை  மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வம், மற்றும் பள்ளிகள் துணை ஆய்வாளர் குமார் மற்றும் அலுவலர்கள் சம்பவ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.மேலும் மாணவ மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student strike for head master transfer to other school


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->