ஆசிரியர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் பள்ளி மாணவ- மாணவிகள்! திணறி போன கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் அமைந்துள்ள  பெட்டட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பெட்டட்டி கிராமத்தை சுற்றியுள்ள பல பகுதிகளை சேர்ந்த  ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதனால் அவர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் இதனை அறிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்  தங்களது பெற்றோருடன்  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களுடன்  பள்ளிக்கு புதிதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியர் ராதா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத பெற்றோர்கள் இது சம்பந்தமாக குன்னூர் கல்வி மாவட்ட அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்க போவதாக மாணவ-மாணவிகளை அழைத்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student strike against for teacher transfer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->