திமுகவால் நின்ற திருமணம்!! மணமகனின் திடீர் முடிவால் பாதிக்கப்பட்ட பெண்!! உறவினர் எடுத்த அவசர முடிவால் ஆரணி அருகே பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராஜகோபால் என்பவரின் மகள் சந்தியாவிற்கும், அரையாளம் கிராமம் அ.தி.மு.க.வை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

இன்று காலை அங்குள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடத்த ஏற்பாடு நடந்தது. மணமக்களை வாழ்த்தி மணமகள் வீட்டினர் தி.மு.க. பேனர் மற்றும் கட்சி கொடி ஆகியவற்றை வைத்தனர்.

இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனரை பார்த்த மணமகன் வீட்டினர், "திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம்?" என்று தகராறில் ஈடுபட்டனர். இது இருதரப்புக்கும் சண்டையை ஏற்படுத்தி கைகலப்பு வரை சென்றது.

இதை பார்த்த சந்தியா 'திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ' என பயந்து, திருமணத்தில் விரும்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார்.


இதை கேட்ட மணமகன் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேற, மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணி ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை என்பவருக்கும், சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடத்தி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stopped marreige by dmk flag


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->