47 ஆண்டுகளுக்கு முன் திருட்டு போன சிலைக்கு வழக்கு!! பொன். மாணிக்கவேலின் அதிரடி எண்ட்ரீ!! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதுவரை இது தொடர்பான எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. 

ஆனால் தற்போது, சிலை திருட்டு போனதை குறித்து சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1971-ல் கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்புக்கு மேலான  5 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போய்விட்டது. 

அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், கடந்த 47 வருடங்களாக அதற்க்கான எந்த வழக்கு பதிவு செய்யவில்லை.

இதேபோல் 1972-ல் அதேகோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலையும், கொலு அம்மன் ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும், எந்த வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதுபற்றிய தகவல் தற்போது தான் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். அதற்கு பிறகு தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையின் போது திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் ஒப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளும் உண்மையான சிலைகள் இல்லை. 

அவைகளில் சில உண்மையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி, தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stolen in sivan temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->