மீண்டும் ஸ்டொ்லைட் ஆலையை இயக்க வேண்டும்..! ஓப்பந்தக்காரர்கள் அமைச்சரிடம் கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


மீண்டும் ஆலையை இயக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த ஸ்டொ்லைட் ஆலை ஓப்பந்தக்காரர்கள். 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த ஆலையை சுற்றி உள்ள கிராம மக்களின் போராட்டம் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி 100வது நாளை எட்டியது. அன்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அங்கு அன்று போடப்பட்டு இருந்த 144 தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தி, இறுதியில், துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த தாக்குதலில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது. 

இந்நிலையில், கோவில்பட்டி அருகே கடம்பூர் சிதம்பரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஸ்டொ்லைட் ஆலை ஓப்பந்தக்காரர்கள் 21 பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 30 பேரும் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடல் காரணமாக சுமார் 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் ஆலையை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு என்பதால் மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite Reopen talk About Minister Kadamboor Raju


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->