இன்று வெளியாகப்போகும் அதிரடி தீர்ப்பு.! சிக்கலில் சிக்குமா தமிழக அரசு..? நீதி நிலைநாட்டப்படுமா..?! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அரசனை பிறப்பித்து மூடியது.  இந்நிலையில், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மனுதாக்கல் செய்ப்பட்டுள்ளது பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார். ரசாயணம் முழுவதுமாக வெளியேற்றபட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவித்தார். 

இதற்கிடையே, மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி நகருக்கே ஆபத்து ஆலை உள்ளே ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாகவும், முறையாக பராமரிக்கவில்லை என்றால் தூத்துக்குடி நகருக்கு ஆபத்து என வேதாந்த குழுமம் எச்சரிக்கை விடுத்தது. இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு [இந்த வாரம்] ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையே, கடந்த 03 ந்தேதி தமிழக அரசு போட்ட அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ''சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தையும் ஆலை நிர்வாகம் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்'' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர் மற்றும் சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (05.07.2018) இந்த மனு மீதான விசாரணை நடக்கவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஆலை நிர்வாகத்திற்கிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தமிழக அரசு கடும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sterlite issue new judgement today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->