ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது பொருளாதார தற்கொலை..! ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ்..!!  - Seithipunal
Seithipunal


ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது பொருளாதார தற்கொலை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ். 

கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது பொருளாதார தற்கொலை என தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் "தாமிர உருக்காலை குறித்து எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிக அளவு உள்ளதை அறிவேன். நாம் நமக்குத் தேவையான தாமிரத்தை நாமே தயாரித்துக் கொள்ளவில்லை என்றால், சீனாவில் இருந்து தான் வாங்க வேண்டியது வரும். புவியியல் மாசுபாடுகள் சட்டப்படி சரி செய்யப்பட வேண்டும். மிகப்பெரிய வர்த்தகத்தை அநியாயமாக மூடுவது பொருளாதார தற்கொலை" என்று ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite Close Is economic suicide JakkiVasudev


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->