ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காது..! தூத்துக்குடி ஆட்சியர் உறுதி..!!  - Seithipunal
Seithipunal


ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துயிருக்கிறார். 

தூத்துக்குடியில் மீனவப் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அம்மாவட்டத்தில் இயல்புநிலை திரும்புவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூறினார். 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய மீனவப் பிரதிநிதிகள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இதுதொடர்பான அரசாணை பிறப்பித்தால் தான், எஞ்சிய 6 பேரை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என்று கூறியுள்ளனர்.

மீனவப் பிரதிநிதிகளின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதியளித்தார். இதற்கிடையில் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மேலும் 74 பேரை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sterlist plant will not work again


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->