வெடித்தது போராட்டம்..! கல்வீச்சு..! தடியடி..!! போர்களமானது தூத்துக்குடி..!!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாக வந்த போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் இன்று உடன்100-ஆவது நாளை நெருங்கியுள்ளது.

இன்று, பல்வேறு அரசியல் கட்சிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை அடுத்து, நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு போட்டுஇருந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்ற பொதுமக்கள், போலீசாரால் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் தடியடி நடத்தவே. போராட்டக்காரர்களும் போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். 

இதனால், பொதுமக்கள் பலருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீ வேனை கீழே தள்ளி கற்களால் தாக்குதல் நடத்தினர். தற்போது தூத்துக்குடி நகரமே போர்க்களமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STERLATE ISSUE POLICE AND PUBLIC ATTACK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->