தூத்துக்குடி கலவரம்: ஸ்டாலின் கண்டனம்..! முதலமைச்சர் ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி அம்மாவட்ட மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று உடன் 100 வது நாளை தொட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக பல்வேறு தரப்பினர் கூறிருந்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். 

இன்று காலை போராட்டம் அறிவித்த படியே போராட்டக்காரர்கள்  பேரணியாக மாவட்ட  ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீஸார் மடத்துக்குளம் பகுதி அருகே தடுத்து நிறுத்த, அதையும் மீறி பேரணியை தொடர பொதுமக்கள் முற்படவே, இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது பதிலுக்கு கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், கடும் கோபத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து தீயிட்டு கொளுத்தினர். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் நான்கு பேர் மீது கொண்டு பாய்ந்தது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கலவரவரத்திற்கு திமுகவின் செயல் தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, ''நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டர்லைட் போராட்டம் நடத்தி வருவதை அதிமுக அரசு கண்டு கொள்ளவும் இல்லை. சுமூக தீர்வு காணவும் இல்லை. வழக்கம் போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த அதிமுக அரசின் அலட்சியத்தாலலேயே இன்று மக்கள் பேரணி நடத்தி அது துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது. ஸ்டர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்''. என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்குடி கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STERLAIT PROTEST CHIEF MINISTER MEETING


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->