திமுக நிர்வாகிகள் யாரும் என்னை நேரில் சந்திக்க கூடாது!! ஸ்டாலின் கூறிய காரணத்தால் அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்!!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மார்ச் 1 ம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த தினம் வருகின்றது. இந்நிலையில் ஸ்டாலின் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாடக்கூடாது என அறிக்கை விட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், என்னை வளர்த்து ஆளாகியவர் கருணாநிதி, அவர் என்னுடன் இல்லாத நிலையில் என்னால் பிறந்த நாளை கொண்டாட இயலாது. 

ஒவ்வொரு பிறந்த நாளும் எனது தந்தை கருணாநிதியிடமும், தயாளு அம்மாவிடமும் வணங்கி வாழ்த்து பெறுவது வழக்கம். இந்த ஆண்டு கலைஞரின் வாழ்த்து எனக்கு கிடைக்காது. 

இந்நிலையில் எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவை தானா? நிர்வாகிகள் யாரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூறக்கூடாது. களப்பணி ஆற்றுங்கள் அது போதும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஸ்டாலின் கருணாநிதி மறைவிற்கு பின் மேடை தோறும் எதையாவது தாறுமாறாக பேசி, ஸ்டாலின் இணையவாசிகளின் கேலிக்கு ஆளாகி வருகிறார். மேலும், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடுகள் குறித்து ஸ்டாலின் எடுத்துள்ள முடிவுகள் மற்ற அனைத்து கட்சிகளுக்கும் சாதமாக அமைந்துள்ளது.

 

ஒரு 70 வருட பழமையான கட்சியின் நிலையையே இப்பொழுது ஸ்டாலின் மிக மோசமாக மாற்றி அமைத்துள்ளார். திமுகவின் சிறு சிறு தோழமை கட்சிகள் கூட தொகுதி பங்கீடு குறித்து திமுகவை நிர்ணயிக்கும் சூழலுக்கு கட்சியை ஸ்டாலின் கொண்டு வந்து விட்டார் என இணையவாசிகள் காலாய்த்தும், திமுகவின் மூத்த நிர்வாகிகள் புலம்பியும் வருகின்றனர். 

மேலும், நெடுவாசல் போராட்டங்கள் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது, அது திமுக ஆட்சி காலத்தில் கையெழுத்திடப்பட்ட திட்டம் என மக்களுக்கு தெரிய வந்தது, இதுகுறித்து ஸ்டாலின், "தெரியாமல் கையெழுத்து போடு விட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்க" என பகிங்கரமாக ஒப்பு கொண்டார். 

இது ஸ்டாலினின் நிர்வாக திறனின் நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது. இவர் முதல்வர் ஆனால், வரும் காலத்தில், மக்களுக்கு எது நல்லது? எது கேட்டது? இதை எதற்காக செய்கிறோம் என்பது கூட தெரியாமல் செய்வது எல்லாம் ஒரு தலைமைக்கு அழகா?! 

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால், பழமையான கட்சியையே சிதைத்து வரும் ஸ்டாலினின் நிர்வாக திறன் மீது, அவரது கட்சியை சேர்ந்தவர்களே நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். இதில் ஸ்டாலின் முதல்வரானால், அவர் தமிழ்நாட்டின் நிர்வாகத்தை எந்த நிலையில் வைத்திருப்பார் என மக்கடம் ஒருவித கேள்வி மனப்பாண்மையை தோற்றுவிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin says dont meet me


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->