இந்து திருமண முறையை கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்!! "மந்திரங்களின் அர்த்தங்கள் கேவலமாக இருக்கும்"- முக ஸ்டாலின் அவதூறு!!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் ஸ்டாலின் முஸ்லிம் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு இந்துக்களின் திருமண முறையை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். திருமண மேடையில் அவர், " ஐதீக திருமணம் திருமணம் என்பது இவ்வாறு நடக்காது. 

நீங்கள் பார்த்திருப்பீர்கள், இவ்வாறு மணமக்களை நாற்காலி போட்டு வசதியாக அமர வைத்து திருமணம் நடக்காது. தரையில் அமர வைத்து புரோகிதர் முன்னிலையில் அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பர். 

எப்படி நடத்துவார்கள் என்றால், அந்த மணமகளுக்கும், மணமகனுக்கும் இடையே நெருப்பை மூட்டி., அந்த நெருப்பில் இருந்து புகை மண்டலத்தை கிளப்பி, அது மக்களின் கண்களை தாக்கி அவர்களை கண்ணீர் சிந்த வைக்கும்.

வந்திருக்கும் உங்களையும் விட்டு வைக்காமல் கண்ணீர் சிந்த விட்டு, பின்னர் புரோகிதர் மந்திரங்கள் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைத்து திருமணத்தை நடத்தி வைப்பார். ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்று மக்களுக்கும் தெரியாது.

வந்து இருப்பவர்களுக்கும் தெரியாது. அந்த புரோகிதரை அழைத்து தனியாக கேட்டால் அவருக்கும் தெரியாது. அதன் உள்ளர்த்தங்களை நினைத்துப் பார்த்தால் உடலெல்லாம் நடுங்கும். அவ்வளவு கேவலமாக வகையில் அந்த மந்திரங்கள் அமைந்திருக்கும்"

இவ்வாறு இந்து திருமண முறை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது இந்து சமூக மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

திராவிட முறை பற்றி பேசும் ஸ்டாலின் பின் எதர்காக பூஜை, புனஸ்காரங்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார். என்று தெரியவில்லை இவ்வாறு இவர் இஸ்லாமிய திருமணத்தில் இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவது, இஸ்லாமியர்களின் ஓட்டை குறிவைத்தே.

இந்துக்களின் ஓட்டு இஸ்லாமியர்களின் ஓட்டை விட குறைவானதல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக அவரை சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin says about hindu marrige


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->