"பாஜகவிற்கு காலே இல்லை" சேலம் மாநாட்டில் ஸ்டாலினின் அதிரடி பேச்சு!!  - Seithipunal
Seithipunal


ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சேலம் மகுடஞ்சாவடியில் அருந்ததியர் அரசியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்குகொண்டு உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில், " மத்திய,மாநில அரசுகளுக்கு அடிதட்டு மக்களை பற்றி சிறிதும் கவலையில்லை. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அரசின் பட்ஜெட்டில்  அறிவிப்பு வெளியானது. நடப்பது மோடி அரசில்லை. மோசடி அரசு.

விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும் என்று, கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது அறிவித்தார்கள். ஆனால்,விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை.
 
விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் டெல்லியில்  நடத்தியது, நாட்டிற்கே அவமானம். இங்கு எதனை முறை மோடி வந்தாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு காலே இல்லை.

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்க இருப்பதாக அரசின் அறிவிப்பு லஞ்சமாகவே தெரிகிறது. பொருளாதாரத்தில் பின் தாக்கியவர்களுக்கு சலுகை அளிக்கலாம். ஆனால், உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது ஏற்புடையதல்ல" என பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin says about bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->