"ஸ்டாலின் மனவேதனையில் உள்ளார்" வெளியான தகவல்!! உடன்பிறப்புகள் கொந்தளிப்பு!!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் 2019 வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதிமுக, திமுக,காங்கிரஸ், பாஜக , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து செயலாற்றி வருகிறது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக தரப்பில் ராஜசத்யன் என்பவர் போட்டியிடவுள்ளார்.

நேற்று, அதிமுக வேட்பாளர் ராஜசத்யன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் பிரச்சாரத்தை தொடங்கினார். இவரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணா பேருந்து நிலையம் அருகில் பிரச்சாரம் செய்தார்.

Related image

அப்போது, "கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு கதை எழுத மட்டும்தான் தெரியும். நாட்டு மக்களின் பிரச்சினைகளை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், நமது வேட்பாளர் ராஜ் சத்தியன் மிகவும் அமைதியாக எந்தவித சத்தமும் இல்லாமல் பொதுச் சேவையை செய்து வருகின்றார்.

அதனால் மக்கள் அதிமுக வேட்பாளரான ராஜசத்யன் தான் தேர்ந்தெடுப்பர். அதிமுக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று. மேலும், மக்களவைத் தேர்தலில் மட்டுமல்லாமல் இடைத்தேர்தல் நடக்கப்போகும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

ஸ்டாலின் தற்பொழுது மனவேதனையினாலும், தோல்வி பயத்தாலும் வாய்க்கு வந்ததை உளறி கொண்டுள்ளார். அவரது பிரச்சாரம் மற்றும் பேச்சு திமுக நிர்வாகிகளுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. 

அவரது பிரச்சாரம் நிச்சயம் திமுக வேட்பாளர்களுக்கு வெற்றியை கொடுக்காது" என திட்டவட்டமாக தெரிவித்தார். இவ்வாறு ஸ்டாலின் உளறுகிறார் என பேசியிருப்பதால் திமுக தொண்டர்கள் பலரும் அமைவிஹார் செல்லூர் ராஜுவின் மீது கொந்தளிப்பில் உள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin sad about election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->