கோட்டையை பிடிக்க திட்டம் தீட்டிய ஸ்டாலின்!! குறட்டைவிட்ட வேட்பாளர்கள்!! பரிதவிக்கும் உடன்பிறப்புக்கள்!!  - Seithipunal
Seithipunal


கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி மொத்தம் 98 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக கூட்டணி136 இடங்களை கைப்பற்றியது. இதன்பின்னர், 18ற்கும் மேற்பட்ட தொகுதிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் அடியெடுத்து வைத்தார் ஸ்டாலின்.

Image result for stalin grama sabha seithipunal

நேரடியாக பிரச்சாரத்தில் இறங்காமல், கிராமசபை என்ற பெயரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்பது போல் அமர்ந்து கேட்டுக்கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகள் தீர்க்கப்படும் என கனிமொழி, உதயநிதி ஆகியோருடன் களத்தில் இறங்கினார் ஸ்டாலின். 

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பை அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் கைகளையே ஸ்டாலின் கொடுத்துவிட, வேட்பாளர்கள் தலைவர் எவ்வழியோ தானும் அவ்வழி என செயல்படாமல் இருந்தனர். 

இதனால், திமுக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை பெறுவது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. கடைசி நேரத்தில் காசை வாரி இறைத்து வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணி கொண்டிருந்தவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பால் அதுவும் முடியாமல் போகவே, டெபாசிட் கூட கிடைக்காதோ என திகைத்து நிற்கின்றனர். 

இப்படிபட்ட தலைவரையும், வேட்பாளர்களையும் பெற்ற திமுகவின் தொண்டர்கள், " பிறந்த இடமும் சரியில்லை, புகுந்த இடமும் சரியில்லை" என புளமியவாறு ஏக கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin master plan about Cm seat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->