"என்ன போல இந்த ஊர்ல யாரு? நா தான் சூப்பர் ஸ்டாரு" என இறங்கி அடிக்கும் ஸ்டாலின்!! கொந்தளிக்கும் மூத்த தலைவர்கள்!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான பாணியில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகின்றது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இதுவரை அதிமுக செய்த திட்டங்கள், இனிமேல் செய்யப்போகும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ, "என்னையும், எனது பிரச்சாரத்தையும் பாருங்க.,கண்ணா இது புதுசு.!! என கூறுவது என்பது போல போல புதுவிதமான யுக்தியை கையிலெடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றார். அது தான் எதிர் தரப்பினரை திட்டுவதும், வசைபாடுவதும், குற்றம் குறை கூறுவதும் மட்டுமே.

ஒவ்வொரு மேடையிலும் ஸ்டாலின், "எடப்பாடி, ராமதாஸ், அன்புமணி, வன்னியர்" என ஒரே விதமான பாணியில் திட்டி தீர்த்து வருகிறார். முதலில் 8 வழிச்சாலை க்கு ஆதரவு தெரிவித்தது திமுக. பின்னர் பாமக எட்டுவழிசாலைக்கு எதிராக களமிறங்கிய போது, ஏளனம் செய்தார். பின்னர், நீதிமன்றத்தில் வழக்காடி எட்டு வழிசாலைக்கு தடை பெற்றபின், "அன்புமணி எடப்பாடிஇடம் உத்தரவாதம் வாங்கித் தருவாரா?" என கேள்வி எழுப்பினார்.முதல்வர் மேல்முறையீடு இல்லை என உத்திரவாதமும் அளிக்க கலங்கி போன ஸ்டாலின் அடுத்த முயற்சி எடுத்தார். 

இது பாமக போட்ட வழக்கே இல்லை. விவசாயிகள்தான் போட்ட வழக்கு என சிலரை தூண்டிவிட்டு விவசாயிகளின் வெற்றியில் அன்புமணி தன்னைத் இணைத்துக்கொள்கிறார். அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை" என பொய்யுரையை பரப்பி வருகிறார். முதலில் வழக்குப்போட்ட பாமக உத்திரவாதம் அளிக்குமா என கேட்ட ஸ்டாலின் பின்னர், பாமக வழக்கே போடவில்லை என இரட்டை வேடம் போட்டு பிறர் மீது அவதூறு பூசியே அரசியல் செய்து விடலாம் மக்களின் நலனுக்காக எதையும் செய்ய வேண்டாம் என்ற மனநிலையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

விவசாய வளர்ச்சிக்கு உதவும் வகையில் வீராணம் ஏரி நிரப்பல்,அத்திக்கடவு-அவினாசி, நதிநீர் இணைப்பு என  நீர் மேலாண்மை குறித்து பாமக அதிமுக கூட்டணி திட்டம் தீட்டிக்கொண்டிருக்கையில், அதிமுக கூட்டணியை எதிர்க்கும் ஸ்டாலினோ கையிலெடுத்து இருக்கும் ஒரே ஆயுதம் இந்த அவதூறு பேச்சு ஒன்றுதான்.இது ஸ்டாலினிற்கு பின்னடைவைத்தான் பெற்று தருகிறது இது திமுகவின் வாக்கு வங்கியை இழக்கச் செய்கிறது என உடன்பிறப்புகளும் திமுகவின் மூத்த தலைவர்களும் ஸ்டாலின் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin has a new version of politics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->