8 வழிச்சாலை திட்டத்தால் இன்னும் என்ன நடக்க போகிறதோ? தேர்வு எழுதிய மாணவர்கள் இடையில் கல் ஊன்றிய அதிகாரிகள்!! - Seithipunal
Seithipunal


சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக செய்யாறில் தேத்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது அதிகாரிகள் கல் ஊன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக அவ்வழியில் உள்ள ஊர்களில் இருந்து நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை தமிழக அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் நிலங்களை அளவீடு செய்து கல் ஊன்றும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதற்காக கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளியும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் கல் ஊன்ற அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதியையும் பொருள்படுத்தாமல் நவீன கருவி மூலம் வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

staff officers amongst the selected students


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->