தென் தமிழிககத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் முறையற்ற திருமணங்கள்! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக, தென் தமிழகத்தில், அதிக அளவில், திருமண வயதினை அடையாத சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள் பெற்றோர்கள். இவர்களை திருமணம் செய்பவர்கள், 25 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவராக இருக்கிறார்கள்.

பரமக்குடியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், இலந்தைக்குளத்தைச் சேர்ந்த செல்லமுத்து (வயது 28) என்பவருக்கும், நேற்று வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற இருந்த திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப் பட்டது. ஏர்வாடியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமிக்கும், வெட்டமனை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 29) என்பவருக்கும், திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால், இந்த செய்தி காவல் துறையினருக்குத் தெரிவிக்கப் பட்டதால், இந்த திருமணமும் தடுத்து நிறுத்தப் பட்டது.

நயினார்கோயிலில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும், கரை மேல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 27) என்பவருக்கும், நடைபெற இருந்த திருமணமும், சமூக ஆர்வலர்களால் தடுத்து நிறுத்தப் பட்டது.    தொண்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், முள்ளிமனை கிராமத்தைச் சேர்ந்த சமயதேவன் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. சமூக நலத்துறையினரும், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து, இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

தடுத்து நிறுத்தப்பட்ட இந்த 4 திருமணங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற இருந்தது, குறிப்பிடத் தக்கது.  ஒரு பெண்ணின் பெற்றோர் கூறும் போது, “இப்போ இருக்கிற கால கட்டத்திலே, குழந்தைகளையும் விடாம பலாத்காரம் பண்றாங்க, நாங்க, பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், பெரும் பீதியில் இருக்கிறோம். அதனால் தான், வயது இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி, திருமணம் செய்து வைக்கிறோம், என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south tamilnadu increase the child marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->