சமூகத்தில், எதிர் மறைக் கருத்தினைக் கொண்ட இலக்கியங்கள் உள்ளதா..!! - Seithipunal
Seithipunal


நமது பண்டைய தமிழ் இலக்கியத்தில், அரிய அருமையான செய்திகளை பல நுால்கள் சொல்கின்றன. அவை இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அதே நேரம், சில இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், நம் சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லை.

ஒரு வேளை இதை எழுதியவர்களின் சமூகம் அந்தக் காலத்தில் உயரியதாகக் கருதப் பட்டதால், இந்த மாதிரி இலக்கியங்கள் எழுதப்பட்டனவா? என்று தெரியவில்லை.

அதனை எழுதியவர், மிகப் பெரிய புலவரும், இலக்கியவாதியுமான கபிலா் என்பது தான், நம்ப முடியாத செய்தியாக இருக்கிறது.

 “இன்னா நாற்பது” என்ற இலக்கிய நுால், கபிலரால் இயற்றப் பட்டது. 40 வெண்பாக்களைக் கொண்டது, இந்த இலக்கிய நுால். மக்களுக்கு உலகியலில் தேவையான பொதுவான ஒழுக்க நெறிகளையும், நீதிகளையும் இந்த நுால் போதிக்கிறது.

கள், ஊன் இரண்டுமே வெறுக்கத் தக்கது என்ற நல் நெறியைப் போதித்த கபிலர், அடுத்த அடியில் சறுக்குகிறார். அந்தணரின் வீட்டில் வேறு சமூக மக்கள் உண்ணுதல் கூடாது, என்ற கருத்தை வலியுறுத்திச் சொல்கிறார்.

இந்தக் கருத்தின் மூலம், சமூக ஏற்றத் தாழ்விற்கு, இந்த மாதிரியான நன்கு படித்த பண்டிதர்களும் உடந்தையாக இருந்துள்ளனர், என்பதை நாம் நன்கு உணர முடிகிறது.

அதே போல், “இனியவை நாற்பது” என்ற இலக்கிய நுாலின் ஆசிரியர் பூதம் சேந்தனார். மக்கள் செய்ய வேண்டிய இனிய செயல்கள், என்று நாற்பது பாக்களில் பட்டியல் இடுகிறார்.

சங்க காலத்தில், நடைமுறையில் இல்லாத பழக்க வழக்கங்களைப் பற்றி இந்நுாலில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழைத் தமிழர்கள், தமிழ்த் தாய் என்று போற்றும் போது, இந்த நுாலில், பெண் நஞ்சு போன்றவள், அவளை வெறுக்க வேண்டும், என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இது பூதம் சேந்தனாரின் சொந்த அனுபவமாக இருக்கலாம்.  ஆனால், சமூகத்திற்கு முற்றிலும் பொருந்தாதவை இந்த இரண்டு இலக்கியங்கள்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Opposite Commands Have Literature


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->