உலகின் நிராகரிக்கப்பட்ட ஓர் நோய் : பாம்புக்கடி - உலக சுகாதார நிறுவனம்..!! - Seithipunal
Seithipunal


ஆம், உண்மையிலேயே பாம்புக்கடி உலகின் நிராகரிக்கப்பட்ட ஒரு நோயே. ஆண்டுக்கு ஒரு இலட்சம் வரையிலான மக்கள் பாம்புகளால் கடிபட்டு பாதிப்புக்கு ஆளாகின்றார்கள். இவர்களில் தோராயமாக 50000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
வேதனையான விசயம் இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற ஏழைகளும் விவசாயக்கூலிகளும்.

இத்தனை இழப்புகளுக்கு என்ன காரணம் ??

பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற மறுத்து உள்ளூர் மருத்துவத்தினை நாடுவது, பாடம்போடுவது, நாட்டு மருந்துகளை உட்கொள்வது, மூட பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது போன்றவற்றாலும்

சிகிச்சைக்கென போதிய மருத்துவர்களோ, மருந்துகளோ, மருத்துவமனைகளோ, மருத்துவ வழிமுறைகளோ இன்றியும் பலர் உயிரிழக்கின்றனர்.

கிராமத்தினர் பாம்புக்கடி ஏற்பட்டதும் அவசர ஊர்தியை அழைத்து அங்கிருந்து பொது மருத்துவமனையினை அடையும் முன்னர் நஞ்சு உடலினுள் தனது பணியைத் துவங்கிவிடும்.

பாம்புக்கடியினால் உட்செலுத்தப்பட்ட நஞ்சாலும், பாம்புக்கடி நஞ்சு முறிவு மருந்தின் வீரியத்தினாலும் இன்னும் பலர் உயிர்பிழைத்தும் நிரந்தர ஊனமாக வாழவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

ஏன் நஞ்சு எதிர்ப்பு மருந்துகள் ஆபத்தானவையா..??

ஆம், உலகளவில் இரண்டு வகையான நஞ்சு முறிவு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது,
பாலிவேலன்ட் (Polyvalent) மற்றும் மோனோவேலன்ட் (Monovalent)

1. Polyvalent : தலைவலி உடல்வலி தசைப்பிடிப்பிற்கு எப்படி நாம் பொதுவாக விக்ஸ் ஆக்சன் 500 போடுகிறோமோ அதுபோன்றது,
அதாவது விசமுள்ள எந்த பாம்பு கடித்தாலும் இதைச் செலுத்துவார்கள், இதனால் அதிகளவு மருந்து செலுத்தவேண்டி வரும், அத்தகைய கூழலில் உயிர் பிழைத்தாலும் அதிகப்படியாக உட்செலுத்தப்பட்ட நஞ்சு முறிவு மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்

உ.தா : எடை இழப்பு, சுவாசக்கோளாறு போன்றவை

2. Monovalent : இது தற்போதைக்கு நம்மிடமுள்ள சிறந்த மருந்து, அதாவது கடித்த பாம்பின் வகைக்கேற்ப நஞ்சு முறிவு மருந்தினைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும், குறைந்தளவு போதுமானது பக்கவிளைவுகளும் இருக்காது.

இவ்விரண்டுமே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது, இதில் மோனோவேலன்ட் பல்வேறு வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது அங்கு பாம்புக்கடிகள் சற்று குறைவே,
பாம்புக்கடிகள் அதிகமுள்ள இந்நியா இலங்கை நாடுகளில் பாலிவேலன்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அதுவும் தலையை அரசு மருத்துவமனைகளில்.

மூலம்: திலீபன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake-byte-WORLD HEALTH ORGANIZATION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->