சில அடிகள் தோண்டினாலே கையில் சிக்கும் அபூர்வம்..?? ஆற்றை மணலை மொட்டையடித்த கையேடு கரூரில் அரங்கேறும் அநியாய சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


ஆற்று மணலை அள்ளி அள்ளி கரூர் மாவட்டத்தை ஒருவழியாக்கி விட்ட விலையில், அடுத்து புது வித கடத்தல் முயற்சியை மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் பகுதியில் தாராளமாக கிடைக்கும் விலை உயர்ந்த வெள்ளைக்கற்களை அரசு புறம்போக்கு நிலங்களில் வெட்டிக் கடத்துகிறார்கள்.

கரூர் சீமைகருவேல மார புதர்கள் மண்டிய சில ஆள் அரவம் இல்லாத பகுதிகளில் சில அடிகள் வரை தோண்டினாலே விலை உயர்ந்த வெள்ளைக்கற்கள் கிடைக்கின்றன. இதைத் தெரிந்து கொண்ட கடத்தல்காரர்கள் ஆங்காங்கே குழிகளைத் தோண்டி, வெள்ளைக்கற்களை கடத்தி செல்கின்றனர்.

இவ்வகை கற்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கற்களை வெட்டி எடுத்துச் சென்று, அங்குள்ள கல்மாவு ஆலைகளில் கொடுக்கின்றனர். வெள்ளை கற்கள் பவுடராக மாற்றப்படும்போது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முடியாத நிலை உருவாகிறது. அந்த பவுடர், பிளிச்சிங் பவுடர், சோப்பு, மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் , அரசியல் கட்சியினர், அனைத்து தரப்பினரும் வெள்ளைக்கல் கடத்துவதை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். கேட்பார் யாரும் இல்லாததால், அவர்களும் தைரியமாக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smuggling-continues-in-karur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->