தக்காளியைத் தொடர்ந்து சதமடிக்க வரும் சின்ன வெங்காயம் - பீதியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தக்காளியைத் தொடர்ந்து சதமடிக்க வரும் சின்ன வெங்காயம் - பீதியில் மக்கள்.!!

சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவதால் அதன் விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. விரைவில் ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாயை எட்டும் என்றும் வியாபாரிகள் கூறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயத்திற்கு என்று தனியாக மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் திங்கள், புதன், வெள்ளி என்று வாரத்தில் மூன்று நாள் நடைபெறுகிறது. 

இந்த சந்தைக்கு வரும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வெங்காயத்தை மொத்தமாக வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் திண்டுக்கல்லில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

ஜூன் மாத துவக்கத்தில் சின்னவெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் 80ரூபாய்க்கு விற்பனையானது.  சந்தைக்கு வெங்காயவரத்து தொடர்ந்து குறைந்த வரும் நிலையில் தேவை அதிகரிப்பு காரணமாக வெங்காயத்தின் விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். . 

கடந்த இரண்டு நாட்களாக தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது சின்னவெங்காயத்தின் விலை சதமடிக்க உள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

small onion price will be increased in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->