சிறுவனைக் கொன்றவனை குண்டாஸ் சட்டத்தில் போடச் செய்த பொது மக்கள் ..!! காவல்துறைக்கு உத்திரவிட்ட பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் கம்பம், வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர், கட்டிடத் தொழிலாளி ராதாகிருஷ்ணன். இவரது மகன் கவினாஷ் (வயது 10) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த மே மாதம் 10-ஆம் தேதி, காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் எதிரே இருந்த புதரில், இந்த சிறுவன், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கி்டந்தான்.

கவினாஷ் வீட்டின் அருகே குடியிருந்த விஜய் (வயது 21) என்பவன் தான், அந்த சிறுவனைக் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். அவனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விஜய், அந்தப் பகுதி மக்களுக்கு, அதிக தொல்லை கொடுத்து வந்துள்ளான். எனவே, இவனுக்கு, அதிகபட்ச தண்டனை தர வேண்டும், என்றும், இவனைக் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விசாரணை செய்ய வேண்டும், என்று கோரி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள், கம்பத்தில் உள்ள ஆயிரக் கணக்கான மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபடும், இந்த விஜய்க்கு, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும், என்று வலியுறுத்தி, தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் மனு கொடுத்தனர். அவர் அந்த மனுவை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் பேரில், அந்த வாலிபரை, குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, தேனி கலெக்டர், பல்லவி பல்தேவ், உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை, கம்பம் வடக்கு போலீசார், சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பொது மக்களின், இந்த பொறுப்புணர்ச்சியை, கம்பத்தில் உள்ள அனைத்து மக்களும் பாராட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Small Boy Killed One. People Judgement to Killer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->