அரசுத் தேர்வு வினாத் தாளில்,  தனியார் கைடு புத்தகத்தில் இருந்து காப்பி எடுக்கப்பட்ட வினாக்களைக் கண்டு அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்டும், டி.என்.பி.எஸ்.சி. தான், இந்தியாவிலேயே சிறந்த முறையாகக் கருதப் படுகிறது. 
    
இதற்கென, சிறந்த நிபுணர்கள் கொண்ட குழுவினை வைத்துத் தான், ஒவ்வொரு அரசுத் தேர்விற்குமான, கேள்விகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
    
வேளாண் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. 
    
கடந்த ஜுன் 14-ஆம் தேதி, இதற்கான தேர்வு நடைபெற்றது. அதில் இரண்டு தாள்கள் கொடுக்கப் பட்டன. ஒன்றில், வேளாண்மைத் துறை பாடங்களில் இருந்து, கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன.
    
மற்றொரு தாளில், பொது அறிவுப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன. இந்த வினாக்களைப் பார்த்த தேர்வாளர்களுக்கு, கடும் அதிர்ச்சி! 
    
பொது அறிவுத் தாளில், 25 திறனறிவு வினாக்கள் கேட்கப் பட்டிருந்தன. இதில் இருந்த பெரும்பாலான வினாக்கள், தனியார் கைடு ஒன்றின் 7-வது பதிப்பில் இருந்து, எண்கள் மற்றும் பக்கங்கள் உட்பட எதுவும் மாறாமல், அப்படியே காப்பி அடிக்கப்பட்டு, தயாரிக்கப் பட்டிருந்தன.
    
இதற்கு முன்பு, இது போன்று நடைபெற்றதில்லை. மிகவும், கவனமாக, வினாக்களைத் தேர்வு செய்வார்கள். ஆனால், தற்போது, ஏன் இப்படி தனியார் கைடு புத்தகத்தை காப்பி எடுத்து, வினாத் தாளில் சேர்த்தனர்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shocking the questions taken form the private book


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->