வெட்கம்! அவமானம்! கண்டனம்! மன்னிக்கவே முடியாது! ரஜினி அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா செல்வதற்கு முன்பு இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

அரசியலில் விமரிசனங்கள் என்பது தவிர்க்க இயலாது. துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தியும் நானும் 25 ஆண்டுகால நண்பர்கள். அவர் என்னை சந்திப்பது எப்போதும் ஒன்றுதான் ,

நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி பெயர், கொடி அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிப்பேன். நிச்சயம் அறிவிப்பேன். 

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் வெடக்கப்பட, அவமான பட வேண்டியது. அவரது குற்றம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். 

நிர்மலாதேவியோடு கவர்னர் பெயர் அடிபடுவது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஊடகப் பெண்களை குறித்து எஸ்.வி. சேகர் பேசியது கண்டனத்துக்குரியது. அவர் தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும், அவரது பேச்சு கண்டனத்துக்குரியது.

மேலும், சீருடையில் இருந்த காவலர்களை தாக்கியது மன்னிக்க முடியாது குற்றம். யார், என்ன சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள போவதில்லை. என்னை பொறுத்தவரை அது மன்னிக்கவே முடியாத குற்றம் தான். என சரவெடி போல் பதில் அளித்துவிட்டு அமெரிக்க செல்ல விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shame Condemned Can not be forgiven Rajini action interview


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->