ஒட்டுமொத்த சென்னையும் நாறப்போகிறது!. அனைத்து வண்டிகளும் நிறுத்தப்பட்டு, போராட்டத்தில் மக்கள் பணியாளர்கள்!. - Seithipunal
Seithipunal



சென்னையில் மக்களின் கழிவுகளை எடுத்துச் செல்லும், கழிவுநீர் ஊர்தி வாகனம் ஒன்றிற்கு குப்பை கொட்டும் திடக்கழிவுமேலாண்மைதுறை, ரூபாய் 100 வாங்கி வந்தது. ஆனால் தற்போது அதன் விலையை திடீரென ரூபாய் 250-திற்கு உயர்த்தி விட்டனர். இதனால் கழிவுநீர் ஊர்தி சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.

அதனால் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, இயற்கை உரம் விற்பனை மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் திடக்கழிவுமேலாண்மைதுறை அலுவலகம் முன்பு அனைத்து வண்டிகளையும் நிறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

சென்னையில் ஓடும் அனைத்து கழிவுநீர் ஊர்திகளும் பள்ளிக்கரணையில் இருந்து துரைப்பாக்கம் வரை சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வைக்கும் கோரிக்கை, நாங்கள் ஒரு வீட்டில் கழிவு நீர் தொட்டிகளிலிருந்து கழிவுகளை எடுப்பதற்கு ரூபாய் 400 வாங்குகிறோம். அந்த வண்டியின் ஓட்டுனர்களுக்கும் உதவியாளர்களுக்கும் திடக்கழிவுமேலாண்மைதுறை பணம் செலுத்தியது போக ருபாய் 50முதல் 100 வரை தான் லாபம் கிடைக்கும்.

ஆனால் திடக்கழிவுமேலாண்மைதுறை தற்பொழுது ஒரு வண்டிக்கு ரூபாய் 250 வரை வாங்குகின்றனர். இதனால் வண்டியின் உரிமையாளர்களுக்கும் வண்டி ஓட்டுபவர்களுக்கும் எந்தவித பயனும் இல்லை. எனவே உடனடியாக அரசு இதனை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

அவர்கள் ஒரு நாளைக்கு வேலைநிறுத்தம் செய்தாலே ஒட்டுமொத்த சென்னையையும் நாறிவிடும். மக்களின் கழிவுகளை மக்களே எடுத்துச் சென்று அதை அகற்றும் பணியில் ஈடுபடுவது ஒரு மகத்தான செயலாகும். ஆனால் அரசு இதிலும் கை வைக்கின்றது என கழிவுநீர் வாகன ஊர்தி ஓட்டுனர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sewage trucks strike in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->