அரசு பள்ளி மாணவர்களிடம் பரவி வரும் விபரீத பழக்கம்..? சீரழியும் வாழ்க்கை - பள்ளியை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்..! - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம், பறக்கையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னர், இப்பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருளான கஞ்சா வைத்து இருந்ததை ஆசிரியர்கள் கண்டனர்.

இதுகுறித்து அறிந்த தலைமை ஆசிரியர், சுசீந்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர்.

மேலும் கஞ்சா வைத்திருந்ததாக ஆசிரியர்கள் கூறிய மாணவர்களிடம் காவல் துறையினர் விசாரித்தனர். இதையடுத்து, தடை செய்யப்பட்ட போதை பொருளை வைத்திருந்ததாக பள்ளி மாணவர்கள் 10 பேரை தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு எப்படிகஞ்சா வந்தது, யார் சப்ளை செய்தது என்பது குறித்து சுசீந்திரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் .

அண்மைகாலமாக, குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா அதிகளவில் புழங்குவது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students take more drugs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->