ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளி ஆசிரியரை மாற்ற கோரி மாணவர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் ஒருவா் கூட தோ்ச்சி பெறாத பள்ளி ஆசிாியா், தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோாி மாணவா்களின் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் கிருஷ்ணகிாி மாவட்டம் கெலமங்களம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்து 29 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இவா்களில் ஒருவா் கூட தோ்ச்சி பெறவில்லை. இது கல்வித்துறை அதிகாாிகள் வட்டாரத்திலும், மாணவ, மாணவிகள், பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை அடைந்தனர்.

கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்லாமல் பள்ளியின் வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மகேஸ்வரி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளார்.

கல்வி அலுவலரிடம் பள்ளி தலைமை ஆசிாியை ராஜலட்சுமியை இடமாற்றம் செய்ய வேண்டும், கூடுதலாக ஆசிாிய, ஆசிாியைகள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா். அவா்களின் கோாிக்கையை ஏற்ற கல்வி அலுவலா் மகேஸ்வரி இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா். இதனைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students and parents struggle


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->