கரும்புக்காட்டில் கிடந்த மாணவியின் எலும்புக்கூடு - குலை நடுங்கிய கூலியாட்கள் - திடுக்கிட வைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


படுகொலை செய்யப்பட்ட மாணவி சரிதாவின் வழக்கை சிபிசிஐடி-க்குமாற்ற வேண்டும் எனவலியுறுத்தி திருத்தணியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு அடுத்த கீச்சலம் ஊராட்சி புதுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி. இவரதுமகள் சரிதா (15).

இவர் கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம்தேதி சரிதா பள்ளிக்குச் சென்றார். பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

ஆனால் சரிதா கிடைக்கவில்லை.பின்னர் சரிதாவின் பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் திங்களன்று கரும்பு தோட்டத்தில் கூலியாட்கள் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது கீச்சலம் ஓடைகால்வாயில் எலும்புக் கூடுஇருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது எலும்புக் கூடு அருகே பள்ளி சீருடை, செருப்பு, ரிப்பன் இருந்துள்ளது.

இதனை சரிதாவின் பெற்றோரிடம் காவல்துறையினர் காட்டியுள்ளனர். இதைப் பார்த்த அவர்கள் தன்னுடைய மகளின் செருப்பு தான் என்றும், அவள் காணாமல் போன அன்று வெள்ளை நிற ரிப்பன் அணிந்திருந்தாள் எனக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் காவல்துறையினர் ஒரு சிலரை கைது செய்தனர். இந்நிலையில், சரிதாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருத்தணியில் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school-student-saritha-sexually-abused-in-thiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->