மாணவனின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தலைமை ஆசிரியர்..!! - Seithipunal
Seithipunal


பிளஸ் டூ-வின் தேர்வு முடிவுகள், கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள், தேர்வுத் தாள் மறு கூட்டலுக்கு, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகத் தான் விண்ணப்பிக்க வேண்டும், என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

விருதுநகர் அருகே உள்ள நடையனேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவர்கள் பலர், அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால், அவர்கள் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியை கருப்பம்மாளிடம் ஒவ்வொரு பாடத்திற்கும், ரூ.275 பணத்தை செலுத்தி உள்ளனர்.

ஆனால், மாணவர்கள் மீது அக்கரை இல்லாத அந்த தலைமை ஆசிரியை, மாணவர்களுக்காக, ஆன் லைனில் விண்ணப்பிக்கவில்லை. இதனால், மறு கூட்டல் மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்த, பல மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இவர்களில் வசந்த குமார் என்ற மாணவன், பொறியியலுக்கான ஜே.இ.இ. என்ற பொறியியல் படிப்பிற்கான, மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு 703 மதிப்பெண்களே கிடைத்துள்ளன. அதற்காக, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், தலைமை ஆசிரியை, செர்வர் பிராப்ளம் என்று சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளார். இதனால், இந்த மாணவர் தன் தாயாருடன், விருதுநகர், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில், இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.

மறு கூட்டலுக்கான, தேதி முடிவடைந்து விட்ட நிலையில், விண்ணப்பித்திருந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SCHOOL HM SPOIL A STUDENT FUTURE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->