கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – ஆஜரானார்கள் சயனும், மனோஜும்….! கேள்வி கேட்க வந்த பத்திரிகையாளர்கள்…! ஆத்திரம் அடைந்த அரசு வக்கீல்கள்…! அமளி…துமளி…! - Seithipunal
Seithipunal


 

கோடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலைகளுக்கு, முக்கிய காரணம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான், என்று அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த சயன் கூறினார்.

இதனால், அவரை, டெல்லியில் இருந்து அழைத்து வந்த தமிழக போலீசார், சயனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைக்க கோரினர். ஆனால், அதற்கு நீதி மன்றம் மறுத்து விட்டது.

ஜாமீனில் வெளியே வந்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யும்படி, தமிழக அரசு வக்கீல்  பாலந்தகுமார் ஊட்டி நீதி மன்றத்தி்ல் மனு தாக்கல் செய்தார். நீதி மன்றம், அந்த மனுவை நிராகரித்து விட்டது.

இந்த நிலையில், நீதி மன்ற உத்தரவுப்படி, சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதி மன்றத்தில் ஆஜர் ஆயினர். பின், அவர்களை, பிப்ரவரி 2-ஆம் தேதி ஆஜராகும்படி, நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை அடுத்து, இருவரும் தங்களது வக்கீல்கள் ஆனந்தன், செந்தில் குமார் ஆகியோருடன் வெளியே வந்தனர். அப்போது, பத்திரிகை செய்தியாளர்கள், இருவரிடமும், கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதனால், அவர்களை வக்கீல்கள் சங்க அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார் செந்தில்குமார்.  ஆனால், அதற்கு, அரசு தரப்பு வக்கீல்கள் பாலநந்தகுமார், தேவராஜ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்குள் பலத்த வாக்கு வாதம் நடைபெற்றது.

பின், செந்தில்குமார் இருவரையும் காரில் ஏற்றி வெளியே அனுப்பி வைத்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sayan and Manoj came to the Ooty court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->