ஸ்டாலினை சந்தித்தது இதற்காகத்தான்.! சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் மகள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ். இவரது மகள் திவ்யா இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மேலும் அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சத்யராஜ் மகள் திவ்யா திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளது. மேலும் திவ்யா, திமுக கட்சியில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த திவ்யா, ஒரு ஊட்டச்சத்து நிபுணராக எனது தொழில் மற்றும் தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க திமுக தலைவரை சந்தித்தேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் மகள் திமுக கட்சியில் இணைந்துள்ளாரா? அவரே கூறிய அதிரடி பதில்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathyaraj daughter talk about meeting with stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->